இலந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்; அசத்தல் தகவல் இதோ.!

இலந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்; அசத்தல் தகவல் இதோ.!



Rhamnaceae Ziziphus jujuba Fruit Benefits 

 

வெப்பமான பகுதிகளில் காணப்படும் இலந்தைப்பழம், புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். அதன் பட்டை, பழம் போன்றவை மருத்துவ குணங்கள் நிறைந்தவை ஆகும். 

இலந்தையின் இலையை நீரில் கொதிக்கவைத்து குடித்தால் கை-கால் குடைச்சல் சரியாகும். வாந்தி கட்டுப்படும். நாவறட்சி, தாகம் நீங்கும். உடலில் இருக்கும் உள்ளுறுப்பு புண்கள் குணமாகும். 

இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கால்சியம், மெக்னீஷியம் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆண்டி-ஆக்சிடண்டுகள் உடலுக்கு நன்மையை தரும். எலும்புகள் உறுதியாகும். 

இரத்த அழுத்தம் சீராகி, உடல்நலம்பெறும். உடலுக்கு தேவையற்ற கொழுப்புகள் கரைத்து வெளியேற்றப்படும். முகத்தில் சுருக்கம் நீங்கி, இளமை தோற்றம் உண்டாகும். 

உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வோர், நீரிழப்பை சரிசெய்ய இலந்தை பழத்தை சாப்பிடலாம். ஞாபக சகதி அதிகரிக்கவும் இலந்தை பழம் உதவுகிறது. 

பயணத்தின்போது வாந்தி பிரச்சனை உடையோர், பசியில்லாமல் அவதியடைவோர் இலந்தைப்பழம் சாப்பிடலாம்.