கர்ப்பிணிகளே.! டாக்டரிடம் இதை எல்லாம் மறைத்தால் அவ்வளவு தான்.! அலட்சியம் வேண்டாம்.! pregnant women should open talk with doctor

அதிகப்படியான பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல அந்தரங்க சந்தேகங்களை மருத்துவர்களிடம் சொல்ல தயங்கி மறைத்து விடுவார்கள். இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு விபரீதங்களை சந்திக்கின்றனர். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க தங்களது சந்தேகங்களை மருத்துவர்களிடம் எந்த விதமான தயக்கமும் இன்றி கேட்பதுதான் தீர்வு.

மருத்துவரிடம் வெளிப்படை

அதிலும் இது தயங்கக்கூடிய விஷயம் இல்லை என்பதை முதலில் பெண்கள் உணர வேண்டும். கருத்தரித்த பின்பு தான் என்று இல்லை கருத்தரிப்பதற்கு முன்பாகவும் கூட அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபடும் போது உங்களது இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் பாலியல் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை மருத்துவரிடம் தெளிவாக தயக்கமின்றி கூற வேண்டும்.

இதையும் படிங்க: மலச்சிக்கலால் அவதிப்படுறீங்களா? எப்படி தப்பிக்கலாம்?..!

Pregnancy

குறிப்பாக அடி வயிற்று வலி, மார்பக காம்புகளில் வலி, பிறப்புறுப்புகளில் வலி உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் இந்த வலியை தாங்க முடியாமல் இருக்கும் பொழுது கூட பலரும் அதை வெளியில் சொல்லாமல் இருந்து விடுவார்கள். இதனால், விளைவுகள் மோசமானதாக இருக்கும். எனவே, உடனடியாக சென்று மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். 

கர்ப்பிணிகள் தாம்பத்திய உறவு

கர்ப்பிணிகள் தாம்பத்திய உறவை மேற்கொள்ளும் போது இனப்பெருக்க உறுப்புகளில் வலி மற்றும் அடி வயிற்று வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். இந்த வலி நீடித்தால் நிச்சயம் மருத்துவரிடம் சென்று நடந்ததை தயக்கம் இல்லாமல் கூறி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Pregnancy

இரத்த கசிவு மற்றும் வெள்ளைப்படுதல் இருந்தால் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். கர்ப்பத்தின் போது தொற்றின் அறிகுறியாகவோ அல்லது பனிக்குடத்தில் விழுந்த சிறு சிறு துளைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.

பால்வினை நோய்க்கான அறிகுறி

அந்தரங்க உறுப்புகளில் கட்டி அல்லது ஏதாவது புடைப்புகளை கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும். இது பாலியல் தொற்று அல்லது பால்வினை நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவற்றை மருத்துவரிடம் மறைக்கக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் தான் என்று இல்லை, இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.

இதையும் படிங்க: கட்டிப்பிடிப்பதால் இவ்வுளவு நன்மைகளா?... அசத்தல் டிப்ஸ் இதோ.!