மலச்சிக்கலால் அவதிப்படுறீங்களா? எப்படி தப்பிக்கலாம்?..!How to Cure Constipation in Tamil 

 

கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வந்த கடும் வெயில் காரணமாக, மக்கள் உடலில் நீர் இழப்பு, மலச்சிக்கல், முகங்களில் கட்டி என வெயில் சார்ந்த பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தனர். இதிலிருந்து தப்பிக்க நீர் சார்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தேடித்தேடி சாப்பிடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதால், சாதாரண நாட்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை, கிலோவுக்கு ஆயிரக்கணக்கில் தலைநகர் சென்னையில் விற்பனையானது. 

மலச்சிக்கலுக்கான காரணங்கள்

அதேபோல, நுங்கு, இளநீர், மோர் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்பட்டன. தற்போது கோடை மழை பெய்யத் தொடங்கி பல மாவட்டங்களில் குளு குளு சூழ்நிலையை ஏற்படுத்தினாலும், பலருக்கும் கொடையாளி ஏற்பட்ட மலச்சிக்கல் சார்ந்த பிரச்சினை என்பது நீங்காமல் இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணியாக நார்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு, மன அழுத்தம், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவை கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: கட்டிப்பிடிப்பதால் இவ்வுளவு நன்மைகளா?... அசத்தல் டிப்ஸ் இதோ.!

health tips

தப்பிக்கும் வழிமுறைகள்

மலச்சிக்கலை சரியாக்க முதலில் போதுமான அளவு நீர் குடிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆப்பிள், பேரிக்காய், முழு அளவிலான தானியங்கள், காய்கறிகள், கீரைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அத்திப்பழம் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் நார்ச்சத்து நமது மலத்தை இளக்கி அதனை எளிதாக வெளியேற்ற உதவி செய்யும்.

இதையும் படிங்க: கரும்பு சாறை இவர்கள் சாப்பிட்டால் அவ்வளவு தான்.. நினைத்து கூட பார்க்க வேண்டாம்.!