கர்ப்பகாலத்தில் பெண்கள் மேக்கப் போடலாமா?; அலட்சியம் வேண்டாம் தாய்மார்களே.!

கர்ப்பகாலத்தில் பெண்கள் மேக்கப் போடலாமா?; அலட்சியம் வேண்டாம் தாய்மார்களே.!



Pregnant Women Should avoid Artificial Chemical Make Up 

 

கர்ப்பமாக இருக்கும் போது சத்தான உணவு, பாதுகாப்பான உடை போன்றவற்றை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தில் பெண்கள் இருக்கின்றனர். இந்த சமயத்தில் மேக்கப் போடுவதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

முக அழகை மேம்படுத்தி காட்ட பலவிதமான மேக்கப் பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் சில ராசயனங்களும் இருக்கும், அவை கருவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மையுடன் இருந்தால், அவை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. 

மேக்கப் பொருட்களில் பாரோபென்ஸ், சோடியம் சல்பேட் போன்ற ரசாயனங்கள் இருந்தால், அவை உடல் நலத்திற்கு ஆபத்து. இதனால் இவ்வகையான மேக்கப் பொருட்களை சாதாரண நபர்களும் உபயோகம் செய்ய வேண்டாம். 

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் இந்த விஷயங்களை கவனமாக பார்ப்பது நல்லது. அதேபோல செயற்கை நிறங்களை அளிக்கும் மேக்கப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. மேக்கப் பொருட்களில் பெனாய்டுகள், காரியம், பாதரசம் போன்றவற்றை போன்றவை கலக்கப்பட்டு இருக்கும் என்பதால் அதனை உபயோகம் செய்யாமல் இருப்பது நல்லது. 

pregnant

இயற்கையாக தயாரிக்கப்படும் முகப்பூச்சுகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் விருப்பம் இருப்பின் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக் பதில் ஏன் ரோஸ் எண்ணெய், பாதாம் எண்ணெய், பீட்ரூட் போன்றவற்றை பயன்படுத்துவதுன் நல்லது. 

முகத்தில் பூசப்படும் ரசாயன கிரீம்களுக்கு பதில் கடலை மாவு பூசுதல் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். அதேபோல, கர்ப்ப காலத்தில் நெயில் பாலிஷ் போன்றவற்றையும் தவிர்ப்பதும், காஜல் மையை பயன்படுத்துவதற்கு பதில் ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றை தயார் செய்த கருமையை பயன்ன்படுத்துவதும் நல்லது.  

கர்ப்பகாலத்தில் செயற்கையான மேக்கப் பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தலே பெண்ணின் நலத்திற்கும், அவரது குழந்தையின் நலத்திற்கும் சாலச்சிறந்தது.