தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் பரிமாற்றம் எப்படி?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!pregnant-woman-baby

கருவுற்றுள்ள பெண்களில், கருக்குழந்தை மற்றும் தாயின் இரத்த நாளம் ஆகியவை மிகவும் அருகருகில் இருக்கும். இதில், நஞ்சுக்கொடியின் வழியில் கருகுழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படும். 

கருக்குழந்தை மற்றும் தாயினுடைய ஹீமோகுளோபின் ஆக்சிஜனோடு மீள் முறையில் பிணையும்.  கருகுழந்தையின் ஹீமோகுளோபின் ஆக்சிஜனோடு இணைத்தல் சமநிலை மாறிலி அதிகமாக இருக்கும். 

பெரியவர்களுடைய ஹீமோகுளோபினுடன் ஒப்பிடும் சமயத்தில் கருகுழந்தையின் ஹீமோகுளோபின் ஆக்சிஜனுடன் அதிக நாட்டம் கொண்டிருக்கும். இது தாயின் இரத்தத்தில் இருந்து கருகுழந்தையினுடைய ஹீமோகுளோபினிற்கு ஆக்சிஜன் எளிதில் பரிமாற்றம் செய்யப்படும்.