சினிமா

திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு.. பிரபாகரனாக களமிறங்கும் முன்னணி ஹீரோ!!

Summary:

Pirapakaran life movie actor babisimka

தமிழ் திரையுலகினர் தற்சமயம் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சம்பந்தமான கதைகளை தேர்வு செய்து திரைப்படமாக எடுக்க ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை  படமாக எடுக்கப் போவதாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தெலுங்கு திரையுலகமும் என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு படம் தயாராக உள்ளது.

Image result for ltte prabhakaran

 

இலங்கையில் உள்ள தமிழ் இன மக்கள் அந்த அரசால் பல்வேறு இன்னல்களையும், கொடுமைகளையும் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட தொடங்கியவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன். தொடர்ந்து நடந்த உள்நாட்டு கலவரத்தின்போது 2009ஆம் ஆண்டு அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்தியா உட்பட உலக நாடுகள் சிலவற்றில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது என்றாலும் தமிழகத்தில் இந்த அமைப்பிற்கு 
பெரும்பான்மையான இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடம் உணர்வுபூர்வமான ஆதரவு உள்ளது.

Image result for ltte prabhakaran

எனவே, இயக்குனர் வெங்கடேஷ் குமார் இயக்க உள்ள இப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பாபி சிம்ஹா பிரபாகரனின் வேடமேற்று நடிக்கிறார். ஸ்டுடியோஸ்18 என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.


Advertisement