சர்க்கரை நோயாளிகளுக்கு, பீர்க்கங்காயால் இவ்வளவு நன்மைகளா.?! இத்தனை நாளா தெரியாம போச்சே.?!

சர்க்கரை நோயாளிகளுக்கு, பீர்க்கங்காயால் இவ்வளவு நன்மைகளா.?! இத்தனை நாளா தெரியாம போச்சே.?!



Peerkankai For diabetic patients

நாம் சமைக்க பயன்படுத்தக்கூடிய பீர்க்கங்காயின் விதை, வேர், இலை என்று அனைத்திலுமே மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பீர்க்கங்காய் இலைகளில் சாறு பிழிந்து லேசாக சூடு படுத்தி ஒரு தேக்கரண்டி அளவு அன்றாடம் சாப்பிட்டு வருவது சர்க்கரை வியாதிக்கு மிகப்பெரிய அளவில் மருந்தாக இருக்கும். 

இதில், அனைத்து விதமான விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இருப்பதால் நோய் தொற்றுகளில் இருந்து காப்பாற்றி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.  

Peerkankai

பீர்க்கங்காய் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த மருந்து. ஆனால், அது கசப்பாக இருப்பதால் பலருக்கும் அது பிடிப்பதில்லை. அவர்கள் பாகற்காய்க்கு பதில் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், விளையாடும் சிறு குழந்தைகள் பலருக்கும் தெருவில் விளையாடுவதால் சொறி, சிரங்கு, புண் உள்ளிட்டவை ஏற்படும். 

அவர்கள் இந்த பீர்க்கங்சாரை சொறி, சிரங்குகளில் தடவுவது விரைவில் புண் குணமாக உதவும். பீர்க்கன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தொற்று நோய் மற்றும் தோல் நோய்கள் பலவற்றிற்கு நிவாரணியாக இருக்கும். 

Peerkankai

மேலும் பீர்க்கங்காய் சமையலில் சேர்த்துக் கொள்ளும் போது கண் பார்வை நன்றாக தெரிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

வயிற்றில் அமில சுரப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு நிறைய பசிக்கும். இவர்கள் அதிக அளவில் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க செய்வார்கள். அவர்கள் இந்த பீர்க்கங்காயை சாப்பிடுவது அமில சுரப்பின் அளவை குறைப்பதுடன் உடல் எடை குறைய காரணமாக இருக்கும்.