இந்த உணவுகளை இரவில் சாப்பிடுகிறீர்களா?.. உங்களுத்தான் பாஸ் இந்த செய்தி.!Night time Avoid Foods Tamil Tips

இரவு நேரங்களில் குறைந்தளவு கார்போ ஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதனால் நமது செரிமான மண்டலம் தனது பணியை செவ்வனே செய்து முடிகிறது. அதற்கு மாறாக காரசாரமான, எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் செரிமான சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அதன் தொடர்ச்சியாக தூக்கமின்மை, மனஅமைதியின்மை, நீரிழிவு பிரச்சனை, வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படும். 

குறைந்தளவு கார்போ ஹைட்ரேட் உணவுகள் குடலுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. காலையில் அதிகளவு ஆற்றலை உணர வைத்து, உற்சாகத்துடன் இருக்க வழிவகை செய்யும். அந்த வகையில், இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் குறித்து இன்று காணலாம். 

Food

தயிர்: 

நாம் சாப்பிடும் உணவுகளில் எளிதில் ஜீரணமாக உதவி செய்யும் பொருளாக தயிர் உள்ளது. இதனை இரவில் உட்கொள்வது நல்லதல்ல. இரவு நேரத்தில் தயிருக்கு பதிலாக மோர் குடிக்கலாம். தயிர் உடலில் கபம் சார்ந்த பிரச்சனையை அதிகரித்து, ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். நாசி துவாரத்தில் சளி ஏற்பட வழிவகை செய்யும் ஆபத்தும் உண்டு. 

சாப்பாடு: 

எப்போது சாப்பிட்டாலும் உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். அதிலும், பிற வேளைகளில் எப்படியாவது சாப்பிட்டுவிடலாம் என்றாலும், இரவு வேலை உணவுகளை கட்டாயம் மென்று விழுங்க வேண்டும். குறைந்த அளவு இரவில் சாப்பிடலாம். இவை மட்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது. நல்ல உறக்கத்தை ஏற்படுத்தும். இரவு நேரத்தில் செரிமான அமைப்பு குறைந்தளவே பணி செய்யும் என்பதால், அப்போது அதிகளவு சாப்பிடுவது ஜீரணத்தை கடினமாக்கி, காலை நேரத்தில் அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.  

புரதம்: 

புரதசத்து நிறைந்த உணவுகளை இரவு வேளைகளில் உட்கொண்டால் செரிமான பிரச்சனை தவிர்க்கப்பட்டு உடலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். புரதம் நிறைந்த பயறு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் கறிவேப்பில்லை, பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். 

Food

பால்: 

இரவு நேரத்தில் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால், குறைந்தளவு கொழுப்புள்ள பாலை குடிக்கலாம். குளிர்ந்த பாலை குடிக்க கூடாது. சூடான பால் உடலுக்கு நல்லது. சூடான பால் எளிதில் ஜீரணமாகும். பாலுடன் சிறிதளவு இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிப்பது நலம். 

மசாலா பொருட்கள்: 

நமது அன்றாட உணவுகளில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் பல்வகை நமையை கொண்டது. இவற்றில், ஆரோக்கியமான மசாலா பொருட்களை தேர்வு செய்வது உடலின் வெப்பத்தை பராமரித்து, பசி உணர்வை ஏற்படுத்தி உடலை மேம்படுத்துகிறது. கூடுமானவரை வீட்டில் மசாலா பொருட்களை தயார் செய்வது நல்லது. 

ஆனால், இரவு நேரத்தில் காரசாரமான மசாலா பொருட்களாலால் தயார் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது. துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.