நைட்டில் 8 மணிக்கு மேல் தினமும் சாப்பிடுறீங்களா?.. எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்.. கவனமாக இருங்கள்.!

நைட்டில் 8 மணிக்கு மேல் தினமும் சாப்பிடுறீங்களா?.. எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்.. கவனமாக இருங்கள்.!


Night eating dangers

இரவு நேரத்தில் அசால்ட்டாக சாப்பிடலாம் என தாமதமாக சாப்பிட்டு உறங்கும் பழக்கத்தை கொண்டவராக நீங்கள் இருந்தால், அப்பழக்கத்தில் இருந்து உடனடியாக வெளியே வரவேண்டியதன் கட்டாயத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க ஊட்டச்சத்துக்கள் எப்படி முக்கியமோ, அதே போல சரியான நேரத்தில் சாப்பிடுவதும் உடல் நலத்துக்கு அவசியம் ஆகும். நேரம் கடந்து சாப்பிட்டால் நமது செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனை உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். 

கட்டாயமாக இரவு நேரத்தில் 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு உறங்க செல்வது சிறந்த ஜீரண சக்தியை வழங்கி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் சாப்பிடுவது அஜீரண கோளாறு, செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். 

healthy tips

7 மணிக்கு சாப்பிட்டு 9 மணிக்கு உறங்கினால் காலையில் எழும்பும் போது சோர்வு, அசதி இருக்காது. உடலுக்கு நிம்மதி உறக்கம் கிடைத்து புத்துணர்ச்சி உண்டாகும். இரவில் தாமதமாக சாப்பிட்டால் அவை மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை வியாதி போன்றவற்றை ஏற்படுத்தும்.