நம்மை பாடாய் படுத்தும் கொரோனா வைரஸ் கொசு மூலம் பரவுமா..? மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்..!



mosquito-can-not-spread-corono-virus

சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவை தடுக்க அணைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியாவிலும் கொரோனவை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், கொரோனா குறித்த பயம் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் நிலையில், கொரோனா குறித்து பரவும் வதந்திகள் மக்களின் பயத்தை மேலும் அதிகரிக்க செய்வதாக உள்ளது. சிக்கென், முட்டை மூலம் கொரோனா பரவும் என சிலர் கிளப்பிவிட, கோழி, முட்டையின் விலை கடுமையாக சரிந்தது. பின்னர் இது வதந்தி, கோழி, முட்டை மூலம் கொரோனா பரவாது என அரசு தெரிவித்தது.

corono

இதனை அடுத்து கொசு மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பகிரப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.

தொடுதல் மூலமாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகிறது. இதனால்தான் சமூக விலகலை கடைபிடிக்க கூறி வலியுறுத்தப்படுகிறது. ஆனால்,  கொசு மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக எந்தவொரு ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை. கொசு மூலம் கொரோனா பரவும் என கூறுவது முற்றிலும் பொய். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.