மஞ்சள் காமாலையில் இருந்து குணம் அடைய வேண்டுமா- இதோ எளிய டிப்ஸ்!

மஞ்சள் காமாலையில் இருந்து குணம் அடைய வேண்டுமா- இதோ எளிய டிப்ஸ்!



manjal-kamalai

கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும்.

உடல் உண்ணாமலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும், தூக்கமின்மையாலும், வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

manjal kamalai

இதிலிருந்து எளிதில் விடுபட எளிய டிப்ஸ்:

1. தினமும் 1-2 டம்ளர் கரும்புச் சாறு குடிக்க வேண்டும். ஏனெனில் இது நிறைய ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது மஞ்சள் காமாலை போக்க பெரிதும் பயன்படுகிறது.

2. மஞ்சள் காமாலையில் இருந்து சீக்கிரம் மீள 3-4 பூண்டு பற்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமடையும்.

3. தினமும் 1டம்ளர் திராட்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமடையும்.

4. உணவில் விட்டமின் டி அதிகமான உணவை எடுத்துக் கொண்டால் பிறக்கின்ற குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவதை தடுக்கலாம்.

5. தினமும் இரண்டு துளசி இலைகளை மென்றோ அல்லது துளசி டீ போட்டு குடித்தோ வரலாம். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் ஹெப்போப்ரக்டிவ் தன்மை மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது.