அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி., கொலஸ்ட்ராலை குறைக்கும் பச்சைபயிறு சட்னி.. இன்றே செய்து அசத்துங்கள்..!!
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் பச்சைப்பயிறு சட்னி எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திதொகுப்பு.
பச்சைபயிரை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் பச்சைப்பயிறு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் படிவதை தடுத்து உடலை கட்டுக்கோப்புடன் வைக்கிறது.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயிறு - ஒரு கப்
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 2 பல்
தேங்காய் - 2 துண்டு
வரமிளகாய் - 6
சீரகம் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க :
வரமிளகாய் - 2
கருவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி

செய்முறை :
★முதலில் பச்சைப்பயிரை நன்கு சுத்தம் செய்து, நீரில் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
★ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வரமிளகாய், சீரகம் சேர்த்து வறுத்து ஆறியதும், மிக்ஸியில் போட்டு பெருங்காயத்தூளுடன் நன்கு பொடிசெய்ய வேண்டும்.
★பின் அதனுடன் ஊறவைத்துள்ள பச்சைப்பயிரை சேர்த்து பூண்டு, தேங்காய், புளி சேர்த்து அரைக்க வேண்டும்.
★அடுத்து எலுமிச்சை சாறு, தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
★இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தபருப்பு, கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் சுவையான பச்சை பயறு சட்னி தயார்.