சளித்தொல்லையை விரட்டியடிக்கும் நண்டு ரசம் செய்வது எப்படி?.. மழைக்கால சமையல் டிப்ஸ்.!

சளித்தொல்லையை விரட்டியடிக்கும் நண்டு ரசம் செய்வது எப்படி?.. மழைக்கால சமையல் டிப்ஸ்.!



How to Prepare Nandu Rasam

பருவ காலங்களில் ஏற்படும் சளித்தொல்லை மற்றும் ஜலதோஷம் போன்றவற்றை சரி செய்ய நண்டு சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இன்று நண்டு காலில் ரசம் செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள் : 

நண்டு கால்கள் - 15 
சீரகம், சோம்பு - தலா 1 தேக்கரண்டி 
மிளகு - 2 தேக்கரண்டி 
பூண்டு - 2 
சாம்பார் வெங்காயம் - 50 கிராம் 
காய்ந்த மிளகாய் - 4 
தக்காளி - 2 
புளி - சிறிதளவு 
மஞ்சள் தூள் - சிறிதளவு 
தேங்காய் பால் - 50 மில்லி 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப 
கடுகு, உளுந்து -  சிறிதளவு
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

செய்முறை : 

முதலில் எடுத்துக் கொண்ட நண்டு கால்கள் ஒவ்வொன்றையும் கடிக்கும் கணுப்பகுதி வரை வெட்டி எடுத்துவிட்டு அதனை இரண்டாக வெட்டி நீரில் சுத்தமாக அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்க வேண்டும்.

பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து புளி சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ளவும். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி இட்டு வதக்க வேண்டும். தக்காளி, வெங்காயம் வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ரசக்கரைசல் சூடான பின்னர் நண்டு கால்களை இட்டு கால் வெந்த பின்னர் சிவந்த நிறத்திற்கு வந்ததும் தேங்காய் பால் ஊற்றி கிளறி இறக்கினால் நண்டு கால் ரசம் தயார். இதனை ரசம் போல சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் அல்லது சூப் போல குடிக்கலாம்.