காலிப்ளவர் சப்பாத்தி செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!

காலை அல்லது மாலை வேளையில், பலராலும் சப்பாத்தி விருப்ப உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தியை, சுழற்சி முறையில் பல வீடுகளில் சமைத்து பரிமாறி வருகின்றனர். இன்று ஒரு மாறுதலுக்காக காலிப்ளவர் கொண்டு சப்பாத்தி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 3 கப்,
நெய் - 3 கரண்டி,
உப்பு - 1 கரண்டி,
பூரணம் செய்ய
பொடிய நறுக்கிக்கொண்ட காலிப்ளவர் - 3 கப்,
தேங்காய் துருவல் - 2 கரண்டி,
துருவிய வெங்காயம் - 3 கரண்டி,
பொடிய நறுக்கிய பச்சை மிளகாய் - 2 கரண்டி,
பொடிய நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 கரண்டி,
மஞ்சள் தூள் - 1 கரண்டி,
சீரகத்தூள் - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
இதையும் படிங்க: நெய் பருப்பு பொடி சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட கோதுமை மாவை உப்பு மற்றும் நெய் சேர்த்து சப்பாத்தி தேய்க்கும் பதத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் மேற்கூறிய பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து கொடுக்க வேண்டும். தேவை என்றால் சிறிதளவு நீர் தெளித்து பிசையவும். மாவு பதம் தயாரானது அரைமணிநேரம் வரை ஊற வைக்கவும்.
இறுதியாக வழக்கம்போல சப்பாத்தியை தேய்த்து, சூடான தோசைக்கல்லில் இட்டு எடுக்க சுவையான காலிப்ளவர் சப்பாத்தி தயார். மேற்கூறிய பொருட்களை நீங்கள் வதக்கியும் சேர்த்துக்கொள்ளலாம். ஒவ்வொஒன்றிலும் ஒவ்வொரு சுவை என்பது மாறுபடும்..
இதனை கெட்டியான தக்காளி சட்னி, சைவ குருமா வைத்து சுவைப்படமும் சாப்பிடலாம்.
இதையும் படிங்க: நெய் பருப்பு பொடி சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!