நெய் பருப்பு பொடி சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!



How to Prepare Ghee Podi Rice 

 

வீட்டில் எப்போதும் ஒரேமாதிரியான குழம்பு, சாதம் என வைத்து சாப்பிடுவோர், மாறுதலை விரும்பினால் நெய் பொடி சாதம் செய்து சாப்பிடலாம்.

செய்யத் தேவையான பொருட்கள்

பருப்பு பொடிக்கு

கடலை பருப்பு - 2 கரண்டி,
துவரம் பருப்பு - 2 கரண்டி,
உளுந்தம் பருப்பு - 2 கரண்டி,
மிளகு - 1 கரண்டி,
சீரகம் - 1/2 கரண்டி
காய்ந்த வரமிளகாய் - 6,
கறிவேப்பில்லை - சிறிதளவு,

தாளிக்க

நெய் - 3 கரண்டி,
உளுந்தம்பருப்பு - சிறிதளவு,
கடுகு - அரை கரண்டி,
பூண்டு - 4 முதல் 6 பற்கள்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
வெங்காயம் & தக்காளி நறுக்கியது - தலா 1,
உப்பு - தேவையான அளவு,
சாதம் - 3 பேருக்கு தேவையான அளவு.

செய்முறை 

முதலில் பருப்பு பொடிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியே மிதமான தீயில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை சூடு உலர்த்தி, மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின் வானெலியில் தேவையான அளவு நெய் ஊற்றி, கடுகு, உளுந்து, பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, கடுகு-உளுந்து பொரிந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். 

வெங்காயம்-தக்காளி வதங்கியதும் தேவையான அளவு உப்பு, பருப்பு மசாலா, சாதம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான நெய் பருப்பு சாதம் தயார்.