குழந்தைகளுக்கு கீரிப்பூச்சி தொல்லை இருக்கிறதா? இதனை மட்டும் செய்யுங்கள் பூச்சி தொல்லை நீங்கும்! - TamilSpark
TamilSpark Logo
மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு கீரிப்பூச்சி தொல்லை இருக்கிறதா? இதனை மட்டும் செய்யுங்கள் பூச்சி தொல்லை நீங்கும்!

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் அவர்களால் அந்த பூச்சி தொல்லையை தாங்க முடியாது. பூச்சி தொல்லையில் இருந்து இயற்கை மருந்தின் மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.


*வாரத்துக்கு இரண்டு முறை கொத்தமல்லி சாதம் புதினா சாதம் இவைகளை கொடுக்கவும். குழந்தைக்கு இனிப்பு பொருட்களை கொடுப்பதை தவிர்க்கவும்.

* முடிந்த அளவு உணவில் அதிக அளவு புதினா கொத்தமல்லி சேர்த்து கொடுக்கவும். இதை இதனை இரண்டு வாரத்திற்கு கடைபிடித்து வந்தால் பூச்சி தொல்லை நீங்கும்.

*பாகர்க்காய் ஜூஷ் வாரம் ஒரு முரை  குடித்தால் சரியாகி விடும். கொட்டை பாக்கு தண்ணீரில் இழைத்து ஒரு ஸ்பூன் கொடுக்கவும். 

*துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் வுடன் சில சொட்டு தேன் கலந்து வாரம் மூன்று முறை தொடர்ந்து கொடுத்து வர பூச்சி தொல்லை நீங்கும்.

*இரவில் வேப்ப எண்ணெய் சிறிது எடுத்து  குழந்தையின் ஆசனவாயின் மேற்புறம் தடவுங்கள் குழந்தை அரிப்பு இல்லாமல் தூங்கும். வேப்பிலை சாறு எடுத்து ஆசன வாயில் விட்டால் பூச்சி வெளியே வந்துவிடும்.

*வேப்பம்பூவை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனுடன் கலந்து வாரத்திற்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் பூச்சி தொல்லை நீங்கும்.

* சுண்டக்காய் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பாட்டில் சேர்த்துவந்தால் குழந்தைக்கு உள்ள பூச்சி தொல்லை நீங்கும்.


Advertisement


ServiceTree


TamilSpark Logo