இது போன்ற அறிகுறிகள் இருந்தால் HIV அல்லது AIDS நோயாக இருக்கலாம்!

HIV symptoms in Tamil


hiv-symptoms-in-tamil

நமது உடலில் HIV கிருமி எப்படி பரவுகிறது? நமது உடலில் HIV கிருமி இருப்பதை எப்படி கண்டறிவது? ஏதாவது அறிகுறிகள் தென்படுமா? இந்த மாதிரியான சந்தேகம் நம்மில் பலருக்கும் வரலாம். சரி வாங்க இதெல்லாம் எப்படி நடக்குது, எப்படி கண்டறியறதுனு பாக்கலாம்.

பொதுவாக தவறான உடலுறவு பழக்கங்கள், HIV பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் நமது உடலில் கலப்பது, HIV பாதிக்க பட்ட ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது இதுபோன்ற காரணங்களால்தான் நமது உடலில் HIV கிருமி தோற்று ஏற்படுகிறது.

hiv issue

பொதுவாக HIV பாதிப்பு வந்த ஒருவருக்கு அது எய்ட்ஸ் ஆக மாற குறைந்தபட்சம் 10 வருடங்கள் ஆகலாம். அதேபோல நமது உடலில் HIV கிருமி பாதிப்பை ஏற்படுத்த குறைந்தது மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.

நமது உடலில் HIV இருப்பதற்கான அறிகுறிகள்:


தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி, வாய் மற்றும் பிறப்புறுப்பில் புண்கள், வயிற்றுப் போக்கு, இரவில் கடும் வியர்வை, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நமது உடலில் HIV தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக HIV பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

hiv issue

தலை வலி, பார்வை குறைபாடு, இருமல் மற்றும் மூச்சடைப்பு, நனைக்கும் அளவுக்கு வியர்வை, பல வாரங்களுக்கு 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல், எடை குறைவு, களைப்பு, தோலில் சொறி இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் உடலில் HIV கிருமி அதிதீவிரமாக வளர்ந்துவிட்டது என்று அர்த்தம்.