அடேங்கப்பா.. தாலி கட்டுவதற்கு பின்னால் வியக்கவைக்கும் ஆச்சரிய தகவல் இதோ.!

அடேங்கப்பா.. தாலி கட்டுவதற்கு பின்னால் வியக்கவைக்கும் ஆச்சரிய தகவல் இதோ.!


Hindu Tamil Married Woman Thali Benefits Tamil

மனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் இடர்பாடுகளை உணர்ந்து, அறிவியல் ரீதியாக அதனை உறுதி செய்து, அதனை குணப்படுத்தவும் பல நல்ல செயல்களை வாழ்வியல் நடைமுறையாக விட்டுசென்றவர்கள் தமிழ் முன்னோர்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் திருமண பந்தத்தில் தங்களின் துணையை கரம்பிடிக்கின்றனர். 

அவ்வாறு திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளில் பெண்ணுக்கு ஆண் தாலி கட்டும் நடைமுறை இந்து திருமணங்களில் உள்ளது. இவற்றுக்கு பின்னால் ஒரு பெரிய அறிவியல் ஆராய்ச்சியே அடங்கியுள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?. 

பெண்களுக்கு மார்பு குழியில் நரம்பு முடிச்சு ஒன்று உள்ளது. இந்த நரம்பு முடிச்சு ஆண்களுக்கு கிடையாது. மார்பு குழியில் பெண்களுக்கு உள்ள நரம்பு முடிச்சு, மூளையில் உள்ள பேசல் ரீஜன் என்ற பகுதியுடன் தொடர்பு உடையது ஆகும். இவை பெண்களுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆண்களுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் உள்ளது. 

tamil

இதுவே ஆணை விட பெண்களுக்கு அதிக நியாபக சக்தியை ஏற்படுத்துகிறது. இந்த அதிக நியாபக சக்தி, ஆண்களை விட பெண்களுக்கு குழப்பத்தை கொடுக்கவும் காரணமாக அமைகிறது. பெண்ணொருவர் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்துவிட்டு, அதனால் குழப்பமடைய இது காரணம் ஆகும். இந்த தத்துவத்தை உணர்ந்து கொண்ட முன்னோர்கள், அதற்கான மருந்தையும் அன்றே கண்டறிந்தனர். 

அதுதான் தங்கத்தினால் ஆன தாலி. தங்கத்தின் மறுத்து குணத்தை உணர்ந்து, தங்கம் பெண்ணின் மார்பு குழியில் எந்நேரமும் உரச பெண்களுக்கு நன்மை ஏற்படும் என்பதை அறிந்து, தாலிகட்டும் முறை கொண்டு வரப்பட்டது. இது சரியாக மார்பு குழியில் வர வேண்டும் என்பதற்காக, மூன்று முடிச்சி போடப்பட்டது. இந்த மூன்று முடிச்சிக்கும் உறவுகள் சார்ந்த பாசத்தை கொடுக்க, அதற்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.