பிறப்புறுப்பு பகுதிகளில் ஏற்படும் தொற்றுகளில் இருப்பது தப்பிப்பது எப்படி?.. பெண்களே தெரிஞ்சிக்கோங்க.!

பிறப்புறுப்பு பகுதிகளில் ஏற்படும் தொற்றுகளில் இருப்பது தப்பிப்பது எப்படி?.. பெண்களே தெரிஞ்சிக்கோங்க.!



Girl Vagina Safety Precaution Natural Tips 

 

பெண்களுடைய பிறப்புறுப்பு பகுதியில் வறட்சி, பாக்டீரியா தொற்று, பிஎச் அளவு குறைவு போன்றவையால் அரிப்பு ஏற்படும். இதனை தடுக்க இயற்கை வழிகள் உள்ளன. 

கற்றாழை: ஈரப்பதம் நிறைந்த கற்றாழை, தன்னுள்ளே பூஞ்சைகளை அழிக்கும் ஆற்றலை கொண்டவை ஆகும். இதன் சதைப்பகுதியை பிறப்புறுப்புப் பகுதியில் மற்றும் அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். 

வேப்பிலை: கையளவு வேப்பிலையை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, அந்நீர் குளிர்ந்ததும் பிறப்புறுப்பு பகுதிகளை வேப்பிலை நீர் கொண்டு கழுவினால் பாக்டீரியா அழியும். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் கிருமிகள், பாக்டீரியாக்கள் அழியும். 

தேங்காய் எண்ணெய்: அரிப்புள்ள பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

பூண்டி: இயற்கையான நோயெதிர்ப்பு திறன் கொண்ட பூண்டு, பாக்டீரியா மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும். பூண்டு பற்களை தட்டி வைட்டமின் ஈ எண்ணெயோடு தேய்த்து வந்தால் பலன் கிடைக்கும். 

பிற ஆலோசனைகள்: இனிப்பு குறைவாக சாப்பிடுதல் அல்லது தவிர்த்தல், இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து, காட்டன் துணிகளால் ஆன உள்ளாடையை பயன்படுத்துதல், பிறப்புறுப்பு பகுதியில் ஈரப்பதம் இன்றி பார்த்துக்கொள்வது பிறப்புறுப்பு பிரச்சனைகளை குறைக்க உதவும்.