#மகளிர்பக்கம்: உள்ளாடை அணியும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?..!

#மகளிர்பக்கம்: உள்ளாடை அணியும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?..!


girl-bra-tips-tamil

பெண்கள் மார்பகத்தை பாதுகாக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களின் உள்ளாடை தேர்வுக்கும் கொடுக்க வேண்டும். மார்பகத்தின் பாதுகாப்பில் உள்ளாடையின் பங்கும் தவிர்க்க இயலாதது. உள்ளாடையின் தரம், மார்பகத்துடன் பொருந்துதல் என்று ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கடைக்கு சென்று உள்ளாடையை வாங்கும் போது கவனத்துடன் அதனை தேர்வு செய்ய வேண்டும். இன்றளவில் நாப்கினுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போல உள்ளாடைக்கும் விழிப்புணர்வு அவசியம். பெண்களுக்கு பருவமடையும் வயதில் இருந்து மார்பக கச்சை எனப்படும் பிரா அணிவது அவசியமாகிறது. 

இன்றளவிலும் உள்ளாடையை பயன்படுத்தும் பெண்கள் தங்களின் மார்பு அளவுக்கேற்ற உள்ளாடையை தேர்வு செய்வதில் தவறாக செயல்படுகின்றனர். உள்ளாடை மார்பகத்திற்கு கீழ் - இடுப்புக்கு மேல் என்று அணிய வேண்டும். இடுப்புக்கு மேல் இருக்கும் அளவே உள்ளாடையின் அளவாக நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனைப்போல, மார்பகத்தை பற்றும் கச்சை என்ற கப் சரிவர இருக்கிறதா? என்பதையும் சோதனை செய்ய வேண்டும். அவ்வாறு பிரா கப் அளவு சரியாக இல்லாத பட்சத்தில் உடல் ரீதியான தொந்தரவு ஏற்படலாம்.  

bra

உள்ளாடையின் நிறத்தில் கவனம் செலுத்துவதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. வெளிர்ந்த நிறமுடைய ஆடையை அணியும் பட்சத்தில் வெளிர் உள்ளாடையும், அடர்நிற ஆடைக்கு அடர் உள்ளாடையும் தேர்வு செய்ய வேண்டும். இதனைப்போல, சேலை, சுடி, டி-சர்ட் போன்றவை அணியும் போது, அதற்கேற்றவாறு உள்ளாடையை அணிய வேண்டும். தளர்வாக உள்ள மார்பகத்திற்கு அண்டர் வியர் பிரா அணியலாம். சிறிய அளவிலான மார்பகத்திற்கு பேடட் பிரா பயன்படுத்தலாம். பெண்களின் மார்பு கச்சையில் பல அம்சம் உள்ளன. இதில், நாம் உடுத்தும் உடைகள் உள்ளாடை மற்றும் செய்யும் வேலைக்கான உள்ளாடைகளை சரியான முறையில் தேர்வு செய்து அணிவது அவசியம். அதனை பருத்தியினால் ஆன துணிகளை கொண்டு அணிந்தால் நல்லது.