மதுபானம் அருந்தும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?.. பெண்களே உஷார்.!

மதுபானம் அருந்தும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?.. பெண்களே உஷார்.!



  Drinking Women Warning 

 

இந்தியாவில் மதுபானம் அருந்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பாலின பாகுபாடு இன்றி பலரும் உடல்நலனை கெடுக்கும் பழக்கத்திற்கு அடிமையாக தொடங்கிவிட்டனர். தேசிய குடும்ப நல ஆணையத்தின் சர்வே முடிவுகளின்படி, 22 விழுக்காடு ஆண்களும், 1 விழுக்காடு பெண்களும் மதுபானம் அருந்துகின்றனர். 

மதுபானம் அருந்தினால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை விட பெண்களுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படும். பெண் உடலில் மதுவில் இருக்கும் ஆல்கஹால் வேகமாக ஈர்க்கப்படுவதால் செரிக்கவும் நீண்ட நேரம் பிடிக்கும். உடலில் போதை அதிக நேரம் நீடிக்கும். பக்கவிளைவை பொருத்தமட்டில் அது ஆண்களை விட பெண்களையே அதிக அளவு பாதிக்கிறது. 

தூக்கத்திற்காக, டென்ஷன் குறைய என ஆண்கள் எந்த காரணத்தை கொண்டு மதுபானம் அருந்தினர்களோ, அதே காரணத்திற்காக பெண்களும் மதுபானம் அருந்தி வருகின்றனர். குறிப்பாக காதல் மற்றும் குடும்ப பிரச்சனை அல்லது விவாகரத்தான பெண், மது அருந்தும் ஆண்கள் உள்ள குடும்பத்தில் இருக்கும் பெண்கள், பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் மதுவகைகளை அருந்துகின்றனர். 

health issue

இவ்வாறான பழக்கம் பிற்காலத்தில் அவர்களின் உடல்நல மற்றும் மனநல சீரழிவுக்கு வழிவகை செய்கிறது. மதுபானம் அருந்துவதால் மஞ்சள் கல்லீரல் நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும். மூளையில் புலன் உணர்வு மந்தமாகி செல்கள் விரைந்து அழியும். குறைவாக மது அருந்தும் பெண்களை கூட இதயம் சார்ந்த பாதிப்பு நிலைகுலைய வைக்கும். 

வாய், தொண்டை, உணவுக்குழல், கல்லீரல், குடல் புற்று நோயை உண்டாகும். மார்பக புற்றுநோய் ஏற்படும். பெண்கள் அதிக அளவு பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளவதற்கான காரணமாக மதுபானம் இருக்கின்றன. குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் மது அருந்தினால் குழந்தைக்கு குறைபாடு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். கருக்கலைப்புக்கு வழிவகை செய்யும். 

மதுபானம் அருந்துவது இருபாலாருக்கும் முதலில் இன்பமாக இருந்தாலும், பின் நாட்களில் அவை கட்டாயம் தூக்கமின்மை உட்பட பிற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி நமது வாழ்நாட்களை சீரழிக்கும் என்பது நிதர்சனம்.