பொருட்களின் மேற்பரப்பில் கொரோனா எத்தனை மணி நேரம் உயிர் வாழும்? அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்.!



coronavirus-stable-for-hours-on-surfaces

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஒரு பொருளின் மீது எத்தனை மணி நேரம் உயிருடன் இருக்கும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் National Institues of Health நிறுவனம். இந்நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, காற்றில் கலக்கும் கொரோனா நீர்த்திவலைகள் (droplets) மூன்று மணி நேரமும் உயிருடன் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

corono

மேலும், பொருட்களின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா  ஒரு நாளுக்கும் மேலாக உயிர் வாழும் திறனுடையது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதும் கொரோனா வைரஸ் ஒரு நாளுக்கு மேல் உயிரருடன் இருக்கும் எனவும், பித்தளை, உலோகப் பொருட்களின் மீது 4 மணிநேரம் வரை உயிருடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.