உலகம் மருத்துவம்

கொரனோ வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்?

Summary:

coronavirus awarness


சீனாவில் இருந்து பரவிவரும் கொரனோ வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சீனாவில் கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 106 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், மேலும் 4,500 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், கொரனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.  

கொரனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்?

* சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தியோ அல்லது (handwash) பயன்படுத்தியோ அடிக்கடி தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

* இருமல் மற்றும் தும்மலின் போது கைகுட்டைகள் அல்லது டிஸ்யு  பேப்பரை பயன்படுத்தி வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். தும்மிய பிறகு கைகளை சுத்தமாக ஒருமுறை கழுவ வேண்டும். 

* காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களிடம் நெருங்கி பழகுவதை சற்று தவிர்க்கவும்.

* யாரேனும் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

* வேகவைக்கப்படாத மாமிசங்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 


 


Advertisement