மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
பெற்றோர்களே கவனம்.. அறிவை மங்க வைக்கும் தொலைக்காட்சி?.. குழந்தைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்..!!

இன்றளவில் உள்ள குழந்தைகள் ஸ்மார்ட்போன், வீடியோ கேம், தொலைக்காட்சி என தங்களின் வாழ்நாட்களை தொழில்நுட்பத்தின் உச்சவியால் கிடைத்த உபகரணங்களிடம் செலவழித்து வருகின்றனர்.
மேலும், விடுமுறை நாட்களில் குழந்தைகள் மணிக்கணக்கில் தொலைக்காட்சிகளை பார்த்து வருகின்றனர். கார்டூன் சார்ந்த சேனல்கள் எப்போதும் அவர்களின் விருப்பமான ஒன்றாகி இருக்கிறது.
இதையும் படிங்க: பச்சை நிற ஆப்பிள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாமா?.. விபரம் உள்ளே.!!
அறிவுசார்ந்த தொலைக்காட்சி சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்
குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது தவறு இல்லை எனினும், அவர்கள் மணிக்கணக்கில் அதிலேயே மூழ்கி இருப்பது ஆபத்தானது. அவர்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அவர்களின் அறிவுகளை மேம்படுத்த உதவினால் நலம்.
மாறுபட்ட கலாச்சாரம், உலகின் பாரம்பரிய இடங்கள், அங்குள்ள மக்கள் போன்றவற்றை அவர்களின் பொது அறிவுகளை மேம்படுத்த உதவும். ஆகையால், பெற்றோர் அதுசார்ந்த சேனலை பார்த்து பழகுவது, உங்களின் பிள்ளைக்கும் வழிகாட்டியாக அமையும்.
நீங்கள் எப்போதும் சீரியல், படம், ஒருசில கார்டூன் என மூழ்கி இருந்தால், அவர்களின் எண்ணமும் அப்படியே இருக்கும். அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்களது வேலை சார்ந்து மட்டும் நேரத்தை ஒதுக்காமல் தங்களது குழந்தைகளுக்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கினால் அவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
தற்போதைய காலத்தில் சிறுவயது முதலே குழந்தைகள் பல விஷயங்களை உணர்ந்து அதை தெரிந்து கொள்கிறார்கள். தன்னை தொல்லை செய்யகூடாது என எண்ணி தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை காண்பிக்கும் பெற்றோர், அதிலிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்வர் என எண்ணுகின்றனர்.
ஆனால் அவை அறிவை மங்க செய்து சில தவறான முடிவுகளையும் எடுக்க வைக்கிறது. பெற்றோர்களால் மட்டுமே குழந்தைகளுக்கு எது சரியானது என்பதை உணர்த்த முடியும். தன் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி பல அறிவு சார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொடுப்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: நாக்கில் ஏற்படும் புற்றுநோய்: மக்களே உஷார்.. இந்த அறிகுறி இருக்கா?