சிறு நீருடன் அது கலந்து வந்தால் கொடிய நோயாக இருக்கலாம்! உடனே மருத்துவரை பாருங்கள்!



be-aware-of-urine-with-blood

உடம்பு சரி இல்லை என்று நாம் மருத்துவரிடம் செல்லும்போது மருத்துவர்களில் முதலில் சொல்லுவது யூரின் டெஸ்ட் எடுங்க என்பதுதான். ஏனென்றால் நமது யூரின் நமது உடம்பில் உள்ள வியாதிகளை பிரதிபலிக்கும் கண்ணாடி.

வாழ்க்கைமுறை மாற்றம், உணவு பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்டிற்கு சுமார் 80  லட்சம் பேருக்கு சிறுநீர் சம்மந்தமான வியாதிகள் வருவதாக மருத்டுவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அவாறான வியாதிகளில் முக்கியமான இன்றுதான் சிறு நீருடன் ரத்தம் வெளியேறுதல். வாறு உங்களுக்கு அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது மிகவும் நல்லது.

health tips

சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவதற்கான காரணங்கள்.

சிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொற்று சிறுநீருடன் ரத்தம் வெளியேற ஒரு முக்கிய காரணமாக அமையும். மேலும் தினமும் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காமால் இருப்பது மற்றும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் கழித்து விடமால் இருப்பதும் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும்.

பெரியவர்களுக்கு சிறுநீரகம், சிறுநீரகப் பாதை, சிறுநீர்ப் பை, சிறுநீர் வடிகுழாய் ஆகியவற்றில் புற்றுநோய் இருந்தாலும் ரத்தம் கலந்து அடர்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

அதிகமான உடற்பயிற்சிக்கூட சிறுநீருடன் ரத்தம் வெளியேற வாய்ப்பாக அமைகிறது. ஏனென்றல் அதிகப்படியான உடற்பயிற்சியின் பொது ரத்த குழாய்கள் சிதைந்து ரத்தம் வெளியேறுகிறது.

சிறுநீர் கற்கள் இருப்பது கூட சிறுநீருடன் ரத்தம் வருவதற்கான வாய்ப்புகளில் ஓன்று. இந்த முறையில் போதுமான அளவு நீர் அருந்தாமல் இருக்கும் பொது சிறுநீர் கற்கள் சிறுநீர் பாதையில் உரசி ரத்தம் வர வாய்ப்புகள் அதிகம்.

போதை மாத்திரைகள், ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரண மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால் அவை ரத்தத்தட்டணுக்களின் உறையும் தன்மையைக் குறைத்துவிட்டு ரத்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டு சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும்.

health tips

பிரச்சனைகள்

 சிறுநீர் வழியே ரத்தம் வெளியேறும்போது ரத்த இழப்பு ஏற்படும். அதனால், ரத்தச் சோகை வரும். மேலும், ரத்த அழுத்தம் குறைந்து மயக்கமும் வரலாம்.

 சிறுநீரோடு கட்டி கட்டியாக ரத்தம் வெளியேறினால் சிறுநீர் வடிகுழாயில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

 காலையில் தூங்கி எழும்போது கண்களைச் சுற்றி வீங்குதல், உடல் உப்புசமாகி எடை கூடுதல், ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பது போன்றவைகளும் அடங்கும்.