குட்டிஸுக்கு விருப்பமான வாழைப்பழ அல்வா வீட்டிலேயே செய்வது எப்படி?..!

குட்டிஸுக்கு விருப்பமான வாழைப்பழ அல்வா வீட்டிலேயே செய்வது எப்படி?..!



banana-halwa-preparation

 

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாழைப்பழ அல்வா எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

முந்திரி - 5 
சோள மாவு - 5 தேக்கரண்டி 
பாதாம் - 5 
நெய் - 6 தேக்கரண்டி 
சர்க்கரை - 1 கப் 
வாழைப்பழம் - 8

செய்முறை :

★முதலில் வாழைப்பழத்தை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.

★பின் வானலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும், பொடியாக நறுக்கி வைத்த பாதாம், முந்திரியை வறுத்து தனியாக வைக்க வேண்டும்.

★அதை வானலியில் நெய் விட்டு வாழைப்பழ விழுதையும் நன்கு கிளறி கொள்ள வேண்டும்.

★வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும், சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கிளற வேண்டும்.

★அடுத்து ஒரு கிண்ணத்தில் சோளமாவு, தண்ணீருடன் சேர்த்து வாழைப்பழத்தையும் சேர்த்து கிளற வேண்டும். இடையிடையே நெய் சேர்த்துக் கொள்ளவும் 

★இறுதியாக அல்வா பதத்துக்கு வந்ததும் வறுத்தெடுக்க பாதம், முந்திரியை சேர்த்து இறக்கினால் வாழைப்பழம் அல்வா தயாராகிவிடும்.