அச்சச்சோ.. வெயிலுக்கு குளுகுளு குளிர்பானங்களை குடிக்கிறீங்களா?.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை செய்தி.!!Artificial Cool drinks side effects

 

கோடை காலத்தில் வெளியில் செல்பவர்கள் உடல் குளிர்ச்சியடையவும், வெயிலில் இருந்து தப்பிக்கவும் கடைகளில் விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களை வாங்கி குடிக்கின்றனர்.  

ஆனால் செயற்கை குளிர்பானங்களை அதிகளவில் குடிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த செய்தித்தொகுப்பில் செயற்கை குளிர்பானங்களை குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து காணலாம்.

இதையும் படிங்க: பாக்கெட் மாவுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்; உஷாரா இருங்க மக்களே.!

செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் விளைவுகள்

குளிர்பானங்கள் உடல் வெப்பத்தை குறைத்து தற்காலிக குளிர்ச்சியை அளிப்பதோடு, தற்காலிக நீர்ச்சத்து குறைவதையும் தடுக்க உதவும். ஆனால் அதில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.

health tips

மருத்துவ நிபுணர்கள் கூறுவது

செயற்கை குளிர்பானங்களில் உள்ள சர்க்கரை மற்றும் பிற பொருட்கள் இதயநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் அதில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகளின் அடர்த்தியை குறைக்ககூடும் எனவும், கல்லீரல் பாதிப்புக்கான அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

குளிர்பானங்களில் உள்ள காஃபின் தூக்கமின்மை மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துவதுடன் தலைவலி, மயக்கம், நீரிழப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. எனவே கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்க செயற்கையான குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறுகள், இளநீர் போன்ற ஆரோக்கியமான பானங்களை குடிப்பது நமது உடலுக்கு மிகவும் நல்லது.

இதையும் படிங்க: கர்ப்பிணிகளே.! டாக்டரிடம் இதை எல்லாம் மறைத்தால் அவ்வளவு தான்.! அலட்சியம் வேண்டாம்.!