ஒரே பள்ளியில் 229 மாணவர்கள், 4 ஆசிரியர்களுக்கு கொரோனா.! மீண்டும் மூடப்பட்ட பள்ளி.!

ஒரே பள்ளியில் 229 மாணவர்கள், 4 ஆசிரியர்களுக்கு கொரோனா.! மீண்டும் மூடப்பட்ட பள்ளி.!



school student affected by corona

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

ஆனால் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென சற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா காரணமாக  வாஷிம் மாவட்டத்தில் பாவனா அரசுப் பள்ளியில், அதிகாரிகள் மாணவர்களை பரிசோதித்தனர், அதில் ஆரம்பத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

corona

இதனையடுத்து அனைத்து மாணவர்களும் பரிசோதிக்கப்பட்டனர், அதில் 229 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 151 மாணவர்கள் அமராவதியைச் சேர்ந்தவர்கள், 55 பேர் யாவட்டமல் பகுதியை சேர்ந்தவர்கள். இதனையடுத்து அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.