ஜீ தமிழுக்கு எதிராக சன் டிவி எடுத்த ஆயுதம்!! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

ஜீ தமிழுக்கு எதிராக சன் டிவி எடுத்த ஆயுதம்!! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிவருகிறது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள், புது புது படங்கள்தான் காரணம். இதில் பெரிய பங்குவகிப்பது சீரியல்கள்.

முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்தனர். ஆனால், தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரும்பாலானோர் டிவி சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர்.  

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த சந்த்ரகுமாரி தொடர் வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் மாலை 6 . 30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மார்ச் 18 ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு  குஷ்பு நடிக்கும் லக்ஷ்மி ஸ்டோர் மாற்றப்பட்டுள்ளது. இரவு ஒன்பது மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர் நீண்ட நாட்களாக TRP யில் முதல் இடத்தில் இருந்துவருகிறது. இந்த நிலையில் செம்பருத்தி ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் சன் டிவியில் ரோஜா சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என ப்ரோமோவை ஒளிபரப்பிவருகிறது சன்டிவி.

roja serial க்கான பட முடிவு

ரோஜா தொடர் இதுவரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 18 மார்ச் 2019 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo