ரஜினியுடன் அந்த கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என கூறிய பிரபல நடிகை! காரணம் இதுதானா!



Yuvarani

90களில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை யுவராணி. இவர் 1991 ஆம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடிப்பில் தமிழில் வெளியான அழகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான செந்தூர பாண்டியன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் சின்ன திரையிலும் நடித்து பிரபலமானவர்.

இவர் சித்தி, தென்றல் போன்ற சீரியலில் நடித்துள்ளார். இவர் முதலில் சினிமாவில் நடிக்கும் போது கதாநாயகியாக மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டு வந்துள்ளார். ஆனால் ஒரு நாள் நடிகர் ரஜினிகாந்த் தங்கையாக பாட்ஷா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததை முதலில் மறுத்துள்ளார்.

Yuvarani

அதன் பிறகு ஒரு நாள் திடீரென நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியிலிருந்து நடிகை யுவராணிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் அவர் ஏன் என் படத்தில் நடிக்க மாட்டேன் என கூறினாய் என கேட்டுள்ளார்.

அதற்கு யுவராணி நான் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தால் என்னுடைய மார்கெட் குறைந்து விடும். அதனால் நடிக்க மாட்டேன் என கூறினேன் என்று கூறியுள்ளார்.

உடனே ரஜினி அவர்கள் என்னை நம்பி நடித்தால் நல்லதாக இருக்கும் என்று கேட்டு கொண்டுள்ளார். அதன் பிறகு தான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என பேட்டி ஒன்றில் கூறி நெகிழ்ச்சி அடைந்தார்.அதுமட்டுமின்றி அந்த படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள், புகழ், திரையுலகில் கிடைத்த மரியாதை எல்லாம் கிடைத்தாக கூறி மகிழ்ச்சி அடைந்தார் நடிகை.