சினிமா

அட.. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவா இது! 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா? இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Summary:

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் 10 வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன்ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான அவர் அழகாக அறிமுகமானதை தொடர்ந்து தனது தந்தையின் சாயல் சிறிதுகூட இருக்கக் கூடாது என்பதற்காக தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்களை இசையமைத்துள்ள அவர் நடிகர் தனுஷ் கூட்டணியில் இணைந்து மாரி 2 திரைப்படத்திற்காக பாடிய ரவுடி பேபி பாடல் யூடியுப் தளத்தில் 100 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தற்போது தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்காக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தனது 10 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அந்த வயதிலேயே கீபோர்டுமுன் அமர்ந்து இசையமைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement