சினிமா

அஜித்தின் 59 வது பட பாடல்கள் குறித்து யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட சூப்பர் அப்டேட்! வீடியோ!

Summary:

Yuvan sankar raja video about pink movie songs

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் தல அஜித். பிங்க் திரைப்படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்றதால், தமிழிலும் மாபெரும் வெற்றிபெறும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். மேலும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பாண்டேவும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் பில்லா, மங்காத்தா படங்களுக்கு பிறகு அஜித் படத்துக்கு இசை அமைக்கிறார் பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பில்லா, மங்காத்தாவில் அஜித்திற்கு இவர் கொடுத்த பாடல்கள், பின்னணி இசை இப்போது அனைவருக்குமே பேவரெட். நீண்ட இடைவேளைக்குப் பின் யுவன் அஜித்தின் 59வது படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார்.

இதுநாள் வரை பட பாடல்கள் குறித்து அப்டேட் கொடுக்காத யுவன் இப்போது ஒரு வீடியோ வெளியிட்டு தல பட பாடல்கள் குறித்து பேசியுள்ளார். 


Advertisement