வலிமை படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்? விளக்கமளித்துள்ள படக்குழு!

வலிமை படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்? விளக்கமளித்துள்ள படக்குழு!


Yuvan sankar raja not exist from valimai movie

ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வலிமை படத்தில் நடித்துவருகிறார் அஜித். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை படத்தின் நாயகி, வில்லன் யார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Valimai

இந்நிலையில் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருந்த நிலையில் அவர் வலிமை படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் விஸ்வாசம் படத்திற்கு இசை அமைத்த  டி இமான் தான் வலிமை படத்திற்கும் இசையமைக்கிறார் என்கிற தகவல் தீயாக பரவியது.

தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள படக்குழு, யுவன் வலிமை படத்தில் இருந்து விலகவில்லை என்றும், யுவன் தான் வலிமை படத்தின் இசை அமைப்பாளர். யுவன் விலகிவிட்டதாக வந்த தகவல் பொய்யானது என படக்குழு விளக்கமளித்துள்ளது.