ஊர் விட்டு, ஊர் வந்து இளம்பெண்ணை குத்தி கொன்ற இளைஞன்! வெளியான பதறவைக்கும் காரணம்!
ஊர் விட்டு, ஊர் வந்து இளம்பெண்ணை குத்தி கொன்ற இளைஞன்! வெளியான பதறவைக்கும் காரணம்!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாமல்லபுரம் பட்டிபுலம் பகுதியில் கட்டிடம் ஒன்றில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்த போது அங்கு கொத்தனார் வேலைக்கு வந்த ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா என்ற மகள் உள்ளார்.ஜெயராஜ் வேலை செய்யும் அதே இடத்திலேயே விஜய நகரத்தை சேர்ந்த துர்காராவ் என்பவரும் வேலை செய்து வருகிறார்.
துர்கா ராவ் மற்றும் லாவண்யா இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்து உள்ளனர். அப்பொழுது துர்கா ராவ் லாவண்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா ராவின் தொந்தரவு தாங்க முடியாமல், லாவண்யா தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோர்களுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் லாவண்யாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வந்த துர்காராவ் அவர்கள் வேலை செய்யும் இடத்திலேயே வேலைக்கு சேர்ந்துள்ளார். பின்னர் மீண்டும் தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு லாவண்யாவை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது காதலை லாவண்யா ஏற்றுக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த துர்காராவ் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து நேற்று லாவண்யாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த லாவண்யா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அதனை தொடர்ந்து போலீசார்கள் துர்கா ராவை கைது செய்தனர்.