சில்க் ஸ்மிதாவை அப்படியே ஜெராஸ் எடுத்துபோல் இருக்கும் இளம் பெண்! மறு பிறவியா? வைரலாகும் வீடியோ.

1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தமிழில் நடிகர் வினுசக்கரவர்த்தியால் "வண்டிச்சக்கரம்" என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார்.
அதன் காரணமாக அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவர் தனது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி 1996 ஆம் ஆண்டு சென்னையில் அவருக்கு சொந்தமான வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அவரை நினைவு படுத்தும் வகையில் இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் அச்சு அசல் நடிகை சிலுக்கு போலவே ஒரு பெண் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சிலுக்கு 😍😍 pic.twitter.com/cIaGRpikWV
— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 10, 2019