சினிமா

நடிப்பையும் தாண்டி, யோகி பாபுவிற்கு இப்படி ஒரு திறமையா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Summary:

Yogibabu writing script for his own scenes in movie

தமிழ் சினிமாவில் யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இதில் இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகிபாபுவின் அசுர வளர்ச்சிபற்றி நடிகர் விஜய் பேசியிருந்தார்.

நடிகர் வடிவேலு திரையுலகில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சூரி அவரது இடத்தை பிடித்தார். ஆனால் அவரை அரைத்தமாவையே திரும்ப திரும்ப அறைகிறாரா என்ற விமர்சங்கங்கள் எழுத்தது. இதனால் நடிகர் யோகிபாபுவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. மாதம் 10 படங்கள் வெளிவந்தால் அதில் குறைந்தது 8 படங்களிலாவது யோகிபாபு நடித்துள்ளார்.

தற்போது ‘தர்மபிரபு, ‘கூர்கா’ மற்றும் ‘ஜோம்பி’ ஆகிய படங்களில் யோகிபாபு ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகிபாபு தான் நடிக்கும் காட்சிகளுக்கு தானே வசனம் எழுதவும் ஆரம்பித்துள்ளார். 

முத்துகுமரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகி வரும் ‘தர்மபிரபு’ படத்தில் யோகிபாபுவுடன் ராதாரவி, கருணாகரன், ரமேஷ் உட்பட பலர் நடித்து வருவது  குறிப்பிடத்தக்கது.
 


Advertisement