
நடிகர் கவுண்டமணி கொடுத்த அட்வைஸை பின்பற்றியதால்தான் இந்த நிலைமைக்கு முன்னேறியுள்ளேன் என யோகிபாபு கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் அசத்தி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் தற்போது முன்னணி ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் யோகி பாபு, முன்னணி காமெடி நடிகர்களை சந்தித்தது குறித்து கூறியிருந்தார். அப்பொழுது அவர், நடிகர் கவுண்டமணி கூறிய அந்த அறிவுரைகளை பின்பற்றியதுதான் எனது வளர்ச்சிக்கு காரணம் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, நான் கவுண்டமணி அவர்களை முதல்முறை சந்தித்து பேசியபோது அவர், தம்பி நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தால், உன்னைத் திண்ணையில உட்கார வச்சுடுவாங்க. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்கு தெரியணும் என கூறினார்.இப்போது வரைக்கும் அதைத்தான் நான் பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement