1250 கிலோ அரிசி.. நடிகர் சங்கத்திற்கு வாரி வழங்கிய காமெடி நடிகர் யோகிபாபு!

1250 கிலோ அரிசி.. நடிகர் சங்கத்திற்கு வாரி வழங்கிய காமெடி நடிகர் யோகிபாபு!


Yogibabu offered 1250 kg rice to cinema artists

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ளன.

இந்த ஊரடங்கால் பல்வேறு துறைகளில் தினக்கூலிக்காக பணிபுரிபவர்களின் வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் தங்களின் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Yogi babu

இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வருகின்றனர். இதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த பல நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த கலைஞர்களின் துயரினை போக்க காமெடி நடிகர் யோகி பாபு தன்னால் முயன்ற உதவியை செய்துள்ளார். இன்று அவர் 1250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.