சினிமா

நடிகர் யோகிபாபுவின் அண்ணனா இது! அப்படியே அவரை மாதிரியே இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

அட.. நடிகர் யோகிபாபுவை மாதிரியே இருக்கும் அவரது அண்ணனை பார்த்தீங்களா! இந்த கோவில் அவரோடதுதானாம்! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் யோகி பாபு. அவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். துவக்க கால கட்டத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் ஏராளமான படங்களில்  ஹீரோவாகவும் நடித்துள்ளார். 

மேலும் தற்போது ஹீரோவாக, காமெடி நடிகராக யோகிபாபு கைவசம் எக்கசக்கமான படங்கள் உள்ளன. இந்நிலையில் யோகி பாபுவிற்கு மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த மாதம் யோகிபாபு மகனின் முதலாவது பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது யோகிபாபுவின் அண்ணனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யோகி பாபுவின் அண்ணன் சக்தி யோகி ராஜா. அவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வராகி அம்மன் மீது தீவிர பக்தி கொண்ட அவர் அம்மனுக்கு கோவில் கட்டி இறைத்தொண்டு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அருள்வாக்கு சொல்லியும் வருகிறாராம். இந்த நிலையில் அவரது புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் யோகி பாபுவை போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

    


Advertisement