சினிமா

ட்விட்டரில் ட்ரெண்டான யோகி பாபுவின் அடுத்த படத்தின் பெயர்! படத்துக்கு இப்புடியும் ஒரு பெயரா?

Summary:

yogi babu next film panikutty

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் யோகி பாபு. அஜித், விஜய் என் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் யோகி பாபு சிறிய பட்ஜெட் படங்களிலும், எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து வருகிறார்.

யோகி பாபுவிற்கு தற்போது நிறைய படங்கள் கை வசம் உள்ளன. பிரபல ஹீரோக்களுடன் காமெடி நடிகராகவும், பிரபல நடிகைகளை காதலிக்கும் மன்மதனாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான நகைச்சுவை வேடங்களையும் ஏற்று தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளவர் யோகி பாபு.

தற்போது இவர் லைகா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அனுசரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் கருணாகரன், சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, கலக்கப்போவது யாரு ராமர் ஆகியோரும் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்று, படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்தின் பெயரை கண்டதும் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு காரணம் படத்தின் பெயர் 'பன்னிக்குட்டி' என்பது தான்.

பொதுவாக ஒருவரை கலாய்ப்பதற்காக நாம் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்போம். ஆனால் தற்போது அந்த பெயரே ஒரு படத்தின் டைட்டில் என நினைக்கும் போது சற்று வருத்தமாக தான் உள்ளது. அதுவும் வெளியான அந்த போஸ்டரில் ஒரு உண்மையான பணிக்குட்டியும் உள்ளது. மேலும் படத்தின் டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


Advertisement