எமனாக மாறிய யோகிபாபு; புகைப்படத்தை வெளியிட்ட அனிருத்!

எமனாக மாறிய யோகிபாபு; புகைப்படத்தை வெளியிட்ட அனிருத்!


yogi-babu-in-dharmapirabu-as-eman

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி வருபவர் நடிகர் யோகிபாபு. இதற்கு முன்னாள் பல படங்களில் காமெடியனாக நடித்திருந்தாலும் நயன்தாராவுடன் இவர் நடித்த கோலமாவு கோகிலா இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் தேடி வருகின்றன.

dharmaprabhu movie

சில நாட்களுக்கு முன்பு இவர் கதாநாயகனாக நடிக்கும் 'கூர்க்கா' என்னும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே யோகிபாபு மற்றுமொரு படத்திலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டார்.

புதிய இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பெயர் தர்மபிரபு. முத்துகுமரன் ஏற்கனவே விமல் நடித்து வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார். அப்படம் வெளியாவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார். ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

dharmaprabhu movie

இந்த படத்தில் யோகிபாபு எமன் வேடத்தில் நடிப்பதாக பஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிகிறது. தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் பார்த்த உடன் அனைவரையும் தன் பக்கம் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே சிரிக்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட இவர் இந்த எமன் வேடத்தில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது படத்திற்கு மிக பெரிய பலமாக பார்க்கபடுகிறது.