பள்ளியில் தோழியுடன் கழிவறைக்கு சென்ற 8 வயது சிறுமி! அங்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! வலியால் துடித்த பரிதாப நிலை! பின்னர் வெளிச்சத்திற்கு வந்த உண்மை! பகீர் சம்பவம்....



yavatmal-school-minor-assault

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் பாபுல்கான் நகரில் நடந்த துயர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்துக்குள் உள்ள கழிப்பறையில் 8 வயது மாணவி மீது நடந்து கொண்ட தாக்குதல் சமூகத்தில் பெரும் கவலைக்கு காரணமாகியுள்ளது. இதில், ஒரு 9 வயது மாணவரும், அவருக்கு உதவியதாக கூறப்படும் பெண் தோழியும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் தகவலின்படி, ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. மாணவனின் பெண் தோழி, பாதிக்கப்பட்ட மாணவியை இனிமையாக பேசி பள்ளி கழிப்பறைக்குள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, மாணவனும் இருந்துள்ளார். பின்னர், மாணவியை அங்கு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு பின்னர், உடல் நல குறைபாடு குறித்து மாணவி தாயிடம் தெரிவித்தார். உடனே மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில், சில காயங்கள் இருப்பது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாணவியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனும் பெண் தோழியும் அடையாளம் காணப்பட்டு, சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க: 17 வயது மாணவரை பலாத்காரம் செய்த 27 வயது ஆசிரியை; பள்ளி வளாகம், வீடு என பதறவைக்கும் சம்பவம்.!

இந்தச் சம்பவம், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புவதோடு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க: பெற்றோரை அழைத்து மாணவரை கண்டித்த ஆசிரியர்! வீட்டிற்கு போனதும் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்!