தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அடஅட.. ஹோம்லி லுக்கிலும் கொஞ்சம் கிளாமர்! இளசுகளை சுண்டியிழுக்கும் வேற லெவல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. அதனை தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே ஓரளவிற்கு பிரபலமானார். பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டார்.
அதில் சிறப்பாக விளையாடி அவர் பெருமளவில் பிரபலமானார். பின்னர் சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு பெரும் கார் விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் பலத்த காயமடைந்த அவர் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் தற்போது யாஷிகா குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தாவணி பாவாடையில் கொஞ்சம் கிளாமராக போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.