முதலில் ஓவியா, இப்போ இவரா! ஆரவ்வுடன் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முதலில் ஓவியா, இப்போ இவரா! ஆரவ்வுடன் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!



yashika-anand-join-in-arav-rajabheema-movie

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஆரவ். அவர் ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சுரபி பிலிம் சார்பில் எஸ்.மோகன் தயாரித்து, நரேஷ் சம்பத் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஆரவிற்கு  ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார். மேலும் அவர்களுடன் நாசர், கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

arav

அதுமட்டுமின்றி ஓவியாவும் இப்படத்தில் இணைந்து ஒரு பாடல் காட்சிக்கு நடனமாடியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்தும் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் யாஷிகா பத்திரிக்கையாளராக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.