சினிமா

பயங்கர கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்! தோழி உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்!!

Summary:

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

நடிகை யாஷிகா கைவசம் தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்ஃபர் போன்ற படங்கள் உள்ளன. மேலும் அவர் தற்போது எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் கடமையை செய் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது தோழி பவானி மற்றும் இரு நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் மாமல்லபுரம் அருகே சென்றபோது அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 மேலும் படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement