இந்த வாழ்க்கை போரடித்துவிட்டதாம்! பிரியங்கா சோப்ரா கணவரின் புதிய ஆசை

Will priyanka chopra fill husband desire


will-priyanka-chopra-fill-husband-desire

2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

இவர் கடந்த டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றித்திரிந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. 

priyanka chopra

அவர்களின் புகைப்படங்கள் அடிக்கடி சமூகவலைதளங்களில் வெளியாகி கேலிக்கும் , கிண்டலுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வகையில் உள்ளாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரியங்கா எத்தியோப்பியாவில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில், பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸிற்கு ஒரு வித்தியாசமான ஆசை உள்ளதாம். இன்றைய நிலவரப்படி உலக அளவில் மிகவும் பிரபலமான அவருக்கு இந்த நட்சத்திர அந்தஸ்தையெல்லாம் விட்டுவிட்டு ஒரு அமைதியான பண்ணை வீட்டில் வாழ வேண்டுமாம்.

priyanka chopra

உலக அழகிப் பட்டம் வென்று, இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தனது மனைவிக்கு அனைத்து நட்சத்திர அந்தஸ்தையும் விட்டுவிட்டு வருவது கடினமாக இருக்கும் என்று நிக் ஜோனஸ் முதலில் யோசித்துள்ளார். பின்னர் தான் தெரிந்தது பிரியங்காவிற்கும் இதில் சம்மதம் உள்ளது என்று.

priyanka chopra

எனினும் நிஜத்தில் அவ்வாறு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு தனிமையான வாழ்க்கையை அவர்கள் அமைத்துகொள்வது சற்று கடினமே. உண்மையில் இதற்கு பிரியங்கா சம்மதிக்கிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.