சினிமா

என்னப்பா சூர்யா படத்திற்கு வந்த சோதனை?

Summary:

why-suriya-didnot-release-diwali

நடிகர் சூர்யா பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பது மிகுந்த திறமை மிக்கவராக விளங்கினார் இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளார்.

மேலும் இவர் ஒரு தனக்கென ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இத்தொண்டு நிறுவனம் ஏழைக் குழந்தைகளின் கல்வியில் பங்காற்றி வருகிறது.

இவர் இப்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்களுடன் சூரிய நடித்து வருகிறார்.

Image result for suriya ngk

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மற்றும் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால், பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சூர்யா ரசிகர்களிடம் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார் செல்வராகவன்.

சூர்யா  ‘என்.ஜி.கே.’  படத்தில் நடித்து வரும் நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கும் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் பல பிரபலங்களும் நடித்துள்ளனர். சயிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.

‘என்.ஜி.கே.’ தீபாவளிக்கு ரிலீஸாகாவிட்டாலும், அதன் அப்டேட் என்னவென்று தெரிந்துகொள்ள சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். எனவே, படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவிடம் ட்விட்டரில் ‘என்.ஜி.கே.’ குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ‘என்.ஜி.கே.’ பற்றி இப்போது எதுவும் சொல்ல மாட்டேன் என எஸ்.ஆர்.பிரபு. ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். 


Advertisement