பிக்பாஸ் சீசன் 7 இந்த வார எலிமினேஷன்.! அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்.!Who left the Bigg Boss house this week

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் இதுவரையில் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஆர்.ஜே பிராவோ, அன்னபாரதி, தினேஷ், அர்ச்சனா, கானா பாலா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

தற்போது இந்த நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில், இந்த வாரம் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது யார்? என்பது தொடர்பாகவும், அப்படி வெளியேற்றப்பட்டவர் வாங்கிய ஒரு நாள் ஊதியம் தொடர்பான தகவலும் வெளியாகியிருக்கிறது.

Bigg boss

சென்ற அக்டோபர் மாதம் 1ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பமானது. அப்போது இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரையில் இந்த நிகழ்ச்சி தொடங்கி 4 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியாக மேலே தெரிவிக்கப்பட்ட 6 நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.

இதில் முதல் வாரத்தில் அன்னபாரதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து, அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்ட இருவரும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஆரம்பத்தில் அர்ச்சனா தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்தாலும், தற்சமயம் அவர் எல்லோருக்கும் பதிலடி கொடுத்து விளையாடி வருகின்றார். ஆனாலும் கானாபாலா, ஆர்.கே. பிராவோ உள்ளிட்டே இருவரும் தங்களுடைய பணிகளை மட்டுமே கவனித்து வருகிறார்கள்.

Bigg boss

இதற்கு நடுவே இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து கானாபாலா வெளியேறியிருக்கிறார். மேலும் இந்த வீட்டிலிருப்பதற்காக அவருக்கு ஒரு நாள் சம்பளமாக 25000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்து அவரை வீட்டிற்குள் அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

 ஆனால் நடப்பு வாரத்தில் அக்ஷயா இந்த வீட்டை விட்டு வெளியேறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் கானாபாலா வெளியேறியிருக்கிறார். இந்த விவகாரம் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மாயா குழுவுக்கு இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசன் ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுவது தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.