சினிமா Bigg Boss

யாரு இங்க Fake! பிக் பாஸ் பாலாஜி கூறிய அதிர்ச்சி காரணம்!

Summary:

Who is the fake contestant in bigg boss season two

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்த சீசன் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தற்போது வரை, அனைவரும் உண்மையான முகத்தை வெளிக்காட்டாமல் போலித்தனமாகவே விளையாடி வருவதாக ரசிகர்கள் பலர் கருது கூறி வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் பிரபலங்கள் கூட இதோ கருத்தைத்தான் கூறி வருகிறார்கள்.

 இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், பாலாஜி மற்றும் டானி இருவரும் தனித்தனியான சோபாவில் அமர்ந்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றனர். அப்போது இவர்களிடம் நடிகை ரித்விக்கா 'யாரு இங்க Fake ஆக இருக்கிறார் என்கிற கேள்வியை முன் வைக்கிறார்.

இதற்கு பாலாஜி கண்டிப்பாக அது டானி தான் என கூறுகிறார். மேலும் தான் அவ்வாறு கூறுவதற்கான காரணத்தையும் கூறுகிறார் நடிகர் பாலாஜி. "நானும் காமெடி செய்வேன் ஆனால் ஒருவரை புண் படுத்துவது போல் காமெடி செய்யமாட்டேன் என பாலாஜி சொல்ல நான்  டானி அப்படி இல்லை என பதில் கூறுகிறார். 

இதற்கு டானி , பாலாஜியை பார்த்து நீங்கள் மற்றவர்களை பற்றி பின்னால் பேசுவதாக சொல்லப்பட்டது. தற்போது அதை நீங்கள் விட்டுடீங்களா..? என கேட்கிறார். இதற்கு பாலாஜி இல்லை என பதில் கூறுகிறார்.

இதன் மூலம் இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரவர் மீது உள்ள தப்புகளை அவர்களையே தானாக ஒத்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது.


Advertisement