சினிமா

விக்ரம் நடிச்சதுல அவருக்கு பிடிக்காத ஒரே படம் இதுதானாம் ! என்ன படம் தெரியுமா ?

Summary:

Which movie is not favorite to actor vikram in his own movies list

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் தன்னை வருத்திக்கொள்ளக்கூடியவர். மேலும் தனது நடிப்பிற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார் நடிகர் விக்ரம். இவர் மகன் நடிக்க வந்துவிட நிலையில் இன்னும் இளமை தோற்றத்துடனையே காட்சியளிக்கும் நம்ம விக்ரம் 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இவருக்கு நீண்ட ஆண்டிற்கு பிறகு வெற்றிப்படமாக அமைந்தது 1999 இல் வெளியான சேது படம் தான்.

சேது படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விக்ரம். பின்னர் பல வெற்றி படங்களையும் தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம். பின்னர் தன படத்தின் வெற்றிக்காக தனது உயிரையும் கொடுத்து நடிப்பார் நடிகர் விக்ரம்.

அருள்,சாமுராய்,கிங் போன்ற படங்கள் இவர்க்கு தொடர்ந்து தோல்விப்படகவே அமைந்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் விக்ரம் நடித்ததில்லையே அவருக்கு பிடிக்காத திரைப்படம் எது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் விக்ரம் தான் நடித்த படங்களிலையே பிடிக்காத படம் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்று பதில் அளித்தார்.

இத்திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகா தேவயானி நடித்திருப்பார். மேலும் நடிகை தேவயானி கணவர் ராஜ்குமார் இந்த படத்தை இயக்கினார்.


Advertisement